ஆண்மகன் நீ
ஆண்மகன் நீ
அரையடி தாடி வைத்து
அடையாளம் சொல்லி விட்டாய்
காதல் தோல்வியென்று...
ஆண்மகன் நீ
புண்பட்ட இதயத்தை
புகைவிட்டு ஆற்றிவிட்டாய்...
ஆண்மகன் நீ
தகிகும் உன் இதயத்தை
"தண்ணீர்" விட்டு அணைத்துவிட்டாய்...
ஆண்மகன் நீ
சேர்த்து வைத்த சோகத்தை
பாக்கு வைத்து மென்றுவிட்டாய்...
பெண்ணென்று பிறந்ததினால்
மண்ணென்று நினைத்தாயோ?
கண்ணில்லையோ உனக்கு
காயமும் தான் எனக்கு....