கணவனின் மாட்டு மூளை

கணவனும் மனைவியும் ஓர் அசைவ சாப்பாட்டுக் கடைக்குச் சாப்பிடச் சென்றார்கள். பலவிதமான கறிகள் மேசையை நிறைத்தன. அதில் ஒரு கறியைக் காட்டி மனைவி கேட்டாள்.

''இது என்ன கறி..?''

மனைவியைச் சீண்டிப் பார்க்க நினைத்த கணவன் சொன்னான்.

''எனக்கு இருக்கிறதும் உனக்கு இல்லாததும் எதுவோ, அதுதான் இது..''

மனைவி நிதானமாகச் சொன்னாள்...

''ஓ...நீங்கள் சொல்வது சரிதான். ஏனெனில், இது மாட்டு மூளையல்லவா..? அது உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது...!''

எழுதியவர் : எஸ். ஹமீத் (2-Feb-14, 4:56 pm)
சேர்த்தது : எஸ். ஹமீத் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 176

மேலே