காதல்

காதல்

பெண் பார்த்து வந்த பின் ஏங்கும் கிராமத்து காதல்

ஆண் :


பொண்ணு பார்த்து வந்த நாளாய்
போக வில்லை பொழுது
பூங்கொடியே உன்னை நினைத்து
பூரிக்குது மனசு
காணும் இடம் எல்லாம்
கருத்தவளே உன் முகம்
காணத் தவிக்குறேனே
கண் மூடி உன்னை மட்டும்
கடை திறந்து நான் இருக்க
கவனம் இல்ல தொழில் மேல


பெண் :

கருத்த மச்சான் என்னஇது
கண் மூடி என் நினைவா
கடையினிலே நீ இருந்தா
காசு பணம் சேர்ந்திடுமா
கணக்காக வாழ
கடை கணக்கில் கவனம் வை
காலையிலும் மாலையிலும்
கவனத்தில் என்னை வை
காகம் வந்து தூக்கி போக
நான் பாட்டி சுட்ட வடையா
கவலை வேணாம் தை மாதம்
நான் வருவேன் துணையா


ஆண் :

கண்ணாட்டி உன் பதிலும்
கணக்காக இருக்குதடி
கருத்தவளே என்னை விட
கடை காசு பெருசாச்சோ
போன வார சந்தையிலே
பொருக்கி எடுத்த சேலை
உன் நினைவா வச்சுருக்கேன்
மச்சு திண்ணை மேல
ராத்திரியில் உன் நினைவா
அதை பொத்திகிட்டு படுப்பேன்
காலையிலே கண் முழிச்சா
அதை நெனச்சி சிரிப்பேன்


பெண் :


அசட்டு மச்சான், ஆசை மச்சான்
அத்தனை ஆசையா எம் மேலே
இப்படிக்கு நீ இருந்தா
ரெண்டு மாத காலத்தில
இளச்சித்தான் போயிடுவ
என்ன இது கலிகாலம்
அப்பச்சி தச்சு வச்ச
சட்டைதான் பத்தாதோ
கைக்கு நான் வாங்கி வச்ச
கடிகாரம் பொருந்தாதோ
என் ராசா, என் சாமி
இப்படிக்கு இருக்காதே
ஊரு கண்ணு எல்லாமே
உன் மேலே படுமே
கவனமா நீ இரு
கல்யாணம் முடியுமட்டும்
அப்புறமா நீ என்னை
உன் கையில் வச்சு தாங்கிகோ
நான் உன்னை என்
நெஞ்சில் வச்சு பார்த்துப்பேன்.

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 11:41 am)
Tanglish : kaadhal
பார்வை : 708

மேலே