மூளை ----- நண்பேன்டா

!@#$%^&*()_+

அடேங்கப்பா
எத்தனை பாதைகள்
உனக்குள் நல்ல பொக்கிஷத்தை
புதைத்து வைக்க

!@#$%^&*()_+

தேனீக்கள் தன் கூடுக்குள்
தேனை சேர்ப்பதுபோல்
உனக்குள் சேர்த்து வைத்தேன்
நல்ல அனுபவத்தை

!@#$%^&*()_+

நல்ல நண்பனே
உன்னை கட்டி அணைத்து
முத்தமிட்ட ஆசை
என் விதியை அமைத்திடும்
நல்லதோர் இசை நீ

!@#$%^&*()_+

உனக்குள் நான்
எனக்குள் நீ
நமக்குள் பிரபஞ்சம்
பிரபஞ்சம் முழுவதும் உன் கனவு

!@#$%^&*()_+

சிந்தனை தருவாய்
சிறப்பாய் செய்திடுவேன்.
எண்ணத்தை தருவாய்
எண்ணியதை முடிப்பேன்.

கற்பனையை தருவாய்
புதுமைகளை படைப்பேன்.
கனவுகளை தருவாய்
காலத்தை வென்றிடுவேன்



***********நண்பேன்டா**************


[!@#$%^&*()_+ = என்ன சொல்ல????]

எழுதியவர் : PAUL (3-Feb-14, 6:14 pm)
பார்வை : 595

மேலே