காதல் அகதி
நான் படித்தேன்,
அழகுமிகு ஆயிரம் கவிதைகள்.........
அவள் கண்களில்!
நான் கேட்டேன்,
அருமைமிகு ஆயிரம் பாடல்கள்........
அவள் பேச்சில்!
நான் காண்பேன்,
ஆசை மிகு இசைவு வார்த்தையினை..........
அவள் மௌனத்தில்!
நான் வாழ்வேன்,
அவள் நெஞ்சத்தில் என்றுமே " காதல் அகதியாய்"!