நிலவுக்கு வாருங்கள்

விண்ணுக்கு போவோம் - வெள்ளை
நிலாவிலே குடி இருப்போம் ...!
மனிதத்தை அங்கு நட்டு
அன்பை அறுவடை செய்வோம் ...!

எல்லோர்க்கும் ஓர் கல்வி என்ற
நிலையை உருவாக்குவோம் ...!
கல்வி கற்றவரை அரசு கட்டிலில்
அமர்த்தி அரசாள வைப்போம் ..!

மனிதத்தை புனிதமாய் காக்கும்
சட்ட திட்டங்களை படைத்திடுவோம்
அதற்க்கு முன் உதாரனமாய்
நாங்களே வாழ்ந்து காட்டுவோம் ...!

சுயநலம் என்ற வார்த்தையை
அகராதியில் இருந்து சுத்தமாய் அழித்திடுவோம்
நிலவில் இருக்கும் நிலத்தை பட்டாப்
போட்டு விற்காமல் எல்லோருக்கும்
சரிநிகர் சமானமாய் பகிர்ந்தளிப்போம்

அறிவியல் துணையோடு புதிய
பொருட்களை கண்டுபிடிப்போம்- அதனால்
சுற்று சூழலை கெடுத்து வைக்காமல்
இயற்க்கை செல்வத்தை இமை போல் காப்போம்

மண்ணும் விண்ணும் தோன்றா பொழுதே
முன்னம் தோன்றிய மொழிக்கெல்லாம்
மூத்த மொழியான தமிழ் மொழியை -நிலவில்
ஆட்சி மொழியாக்குவோம் - அடுத்த மொழியை
அரங்கேற்ற துடிப்பவனை அழித்து விடுவோம் ..!

மதமும் ஜாதியும் நிலவில் இல்லை ...!
அரசியல் கட்சி களுக்கும் இங்கு வேலை இல்லை
காதலுக்கு மட்டும் மரியாதை செலுத்தி
காதல் திரு மணங்களைத் தான் கட்டாய
மக்கள் மணங்களாக ஏற்க சட்டம் ஏற்றுவோம் ..!

நிலவுக்கு வருபவர்களிடம் லஞ்சம் வாங்காமல்
ஊழல் இல்லா ஆட்சி அமைத்து மக்கள் மனதில்
நீங்கா இடம் பிடித்து நல்ல ஆட்சி அமைப்போம்
தேர்தல் வாக்குறிதி இது என்று எண்ணாமல்
நிலவுக்கு வாருங்கள் கரம் நீட்டி காத்திருக்கிறோம்

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Feb-14, 6:46 pm)
பார்வை : 215

மேலே