உறவு
*அது ஒரு மாலைபொழுது
நடந்தது என் கால்கள் குறிக்கோள் இல்லாமல்
*என் இருபுறமும் புகைமண்டலம் ஆம்
இதுஎந்திர மோட்டார்களின் பகைபடலம்
*என் கண்கள் தேடியது என்னவோ
இயற்கைதான் ஆனால் பார்ப்பவை
அனைத்தும் பறக்கும் மனிதர்களை .....
*இவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல
எந்திர வாழ்க்கைக்கு விலை பேசி
விற்கப்பட்ட புவி வாசிகள் .
*சிறகுகள் விரித்து பறக்கும் பறவை
கூட இவர்கள் வேகம் கண்டு வியந்து பறந்தது.
டமார்
ஆம் அந்த சத்தம் என் வல புறத்தில்
சற்று தூரத்தில் ......
மோட்டார் சைக்கிளும் நாலு சக்கர
வாகனமும் கலவி நிற்க ...
ஐந்தாவது நிமிடத்தில்
மக்கள் கூடினர் .
பத்தாவது நிமிடத்தில்
மருத்துவ ஊர்தி வந்தது
பதினைந்தாவது நிமிடத்தில்
சூழ்நிலை சரியானது .
*மனித உறவுகளின் வலிமை
நீருற்றினால் கரையும் வெறும்
மணல் பொம்மையா?
*மாறிய இச்சமுகத்தில்
உறவுகளை மதியுங்கள்
உணர்வுகளை அறியுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்காக
மட்டுமல்ல
வாழ வைப்பதற்காகவும் தான் .