விடியல்

துள்ளி வரும் மழலைக்கு
அன்னை முகம் விடியல்
பள்ளி செல்லும் குழந்தைக்கு
கல்வி தரும் விடியல்....

மீசை முளைக்கும் பருவத்திலே
ஊக்கம் தரும் விடியல்
ஆசை துளிர்க்கும் வயதினிலே
ஒழுக்கம் தரும் விடியல்....

கல்லூரிச் சாலையிலே
நட்பு தரும் விடியல்
கல்லூரி கடந்து விட்டால்
கற்பு தரும் விடியல்...

வேலை ஒன்று பார்க்கையிலே
உழைப்பு தரும் விடியல்
மேலே மேலே செல்கையிலே
திறமை தரும் விடியல்

துணை ஒன்று தேடுகையில்
குணம் ஒன்றே விடியல்
இணையாக சேர்கையிலே
மனம் தருமே விடியல்

குழந்தை ஒன்று வந்துவிட்டால்
பணம் தானே விடியல்
வளர்ப்பதென்று வந்துவிட்டால்
ஊக்கம் தானே விடியல்....

வாழ்வு என்று வந்து விட்டால்
தருமம் ஒன்றே விடியல்
வயது கூடி நரை வந்தால்
துணை தானே விடியல்...

பிரச்சனைகள் என்று இருந்தால்
துணிவு தானே விடியல்
எதிர்ப்பவர்கள் பல இருந்தால்
கனிவு தானே விடியல்....

வாழ்வில் உயர வேண்டும்மெனில்
கனவு தானே விடியல்
கனவு கண்ட வாழ்க்கைக்கு
நம்பிக்கை தான் விடியல்....

பிறர் நலத்தை காக்கவெனில்
மனிதம் தானே விடியல்
அன்பை கொடுக்க முடிந்துவிட்டால்
புனிதம் தந்திடும் விடியல்...

வாழ்ந்த காலம் முடிந்துவிட்டால்
மரணம் தானே விடியல்
மரணம் வந்து சேருமுன்னே
நன்றி ஒன்றே விடியல்!!!!!

எழுதியவர் : முரளிதரன் (5-Feb-14, 10:32 pm)
Tanglish : vidiyal
பார்வை : 149

மேலே