உறைந்திட்ட உணர்வுகள்

உறைந்திட்ட உணர்வுகள்
நினைவுகளின் ஆக்கிரமிப்பில் பனிக்கட்டியாய்
உறைந்திட்ட ஏக்கங்கள்
துளைத்த வேதனைகளில்
விக்கித்து நிற்கும்
மனதிற்கு ஒரே ஆறுதல்,
இதுமட்டும்தான்.
நான் வாழும் வானத்தின் கீழ்
கண்காணா தூரத்தில்
நீ இருக்கின்றாய் ...
என்றாவது ஒருநாள்
காலத்தின் சுழற்சியில்
கணப்பொழுதாவது என்
கண்முன் வரமாட்டாயா...
காத்திருக்கின்றேன் ...
காத்திருப்பேன் .....
காலன் எனைக்கொண்டு செல்லும்வரை...
********************
பெ.மகேஸ்வரி