அன்றொரு நாள்

கண்கள் மூட வலித்தது
இமைகள் நடுவே என் இளவரசியின் பிம்பம்
அழிந்துப்போகுமென்று...
கலங்கிய கண்களுக்குள் ஓரமாய் - சிறு துரும்பொன்று, வலிக்கவில்லை...
என் வாழ்க்கையென நினைத்து - என்
நெஞ்சுக்குள் ஊன்றி வைத்தேன்...
என் வாழ்க்கைக்குறிப்பின் ரகசியமாய்...
என்னை படைத்தவன் கொடுத்த சீதனமாய்...
நான் மடிசாய அவள் வேண்டுமென்று...
ஆம்...
ரகசியமாய் ஒரு விண்ணப்பம்
என்னை படைத்தவனிடத்தில்..
ஒரு நிமிடம் என் ஆயுள் என்றாலும்
அவளோடு வாழ்ந்து உயிர் துறக்க வேண்டுமென்று...
என் விண்ணப்பக்குரிப்பில் பதிவு செய்து
தினமும் அவனிடத்தில் கொடுத்து வந்தேன்
நிச்சயம் ஒரு நாள் என் விண்ணப்பம்
பரிசீலிக்கபடுமென்று...
ஆனாலும்.!!!
என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது - அவன்
செய்த தவறல்ல...
அது - இவன் செய்த தவறு - ஆம்
கடைசிவரை காதலை சொல்லாதது...
இப்படிக்கு
-சா.திரு -