மஞ்சத்து மலர்

மங்கல வாத்தியம்
உன் மொழியாம்
மஞ்சள் முகமோ
கதிரொளியாம்
கொஞ்சும் சலங்கை
புன்னகையாம்-நீ
மஞ்சம் விரியும் தாமரையாம்
வங்கம் தந்தது
உன் பற்கள்
சங்கம் தந்தது
என் சொற்கள்
தந்தம் உந்தன் மேனியடி-நான்
தத்துவம் பேசும் ஞானியடி
அர்ப்பனம் நானே
உந்தன் மடி-
உன் காதலைச் சொல்லி
கதையை முடி