ஆயுள் முழுவதும் மரணதண்டனை

நினைவுகளை நெஞ்சத்தில் வைத்து
கனவுகளை கண்களில் வைத்து
மஞ்சத்தில் துயில் மறந்த
இந்த வஞ்சியை வஞ்சித்ததும் ஏனோ?
விழி நான்கும் உறவாடி
விரல்கள் கோர்த்து
நடந்த நடையை
நிமிடத்தில் மறந்ததும் ஏனோ?
மௌனத்தில் கதை பேசி
மடல்களில் வாழ்க்கையை வரைந்து
பித்தர்களை போல்
சுற்றி திரிந்ததும் ஏனோ?
இது எல்லாம் நீயறிந்தும்
அந்நியனை பார்ப்பது போல்
அலட்சியமாய் நீ என்னை பார்த்த பார்வை
ஆயுள் முழுவதுமே மரணதண்டனை தான்..!!!