மக்கள் நலனை கருதி ஒரு கடிதம் மேயருக்கு

பெயர் திரு.___________அவர்களுக்கு எங்கள் அன்பு கலந்த வணக்கம்
தங்களுக்கு இந்த கடிதத்தை அளிப்பதன் நோக்கம் இதுவே

மாநகர பேருந்துகளில் இப்போது மாணவர்கள் மற்றும் சில இளைஞர்கள் பேருந்தில் தொங்கிக்கொண்டு வருகின்றனர் அதுமட்டும் இன்றி சிலர் பெண்களிடம் தவறான முறையில் பேசுவது திட்டுவதும் அதிகரித்துள்ளது

இது பல பெண்களில் மனதில் புதைந்து கிடக்கும் கவலைகள் வெளியிலும் சொல்ல முடியாமல் வீட்டிலும் சொல்ல முடியாமல் அவர்கள் படும் துன்பங்கள் எங்களைப் போல் சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்

வீட்டு கஷ்டத்திற்காகத்தான் பெண்கள் வேலைக்கு சென்று தங்களது குடும்பத்தை காப்பாற்றுகின்றனர்.

ஆனால் பேருந்தில் அவர்கள் பயணிக்கும் போது எவ்வளவோ துன்பத்தை அனுபவிக்கின்றனர். இதனால் சில பெண்கள் வாழ்க்கையும் இழந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த
ஒரு விஷயமாகும்

அது மட்டும் அல்லாது முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் பேருந்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்

சில சமயங்களில் சரியான முறயில் பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்பது இல்லை
இது எங்களில் சிலருக்கு நடந்த அவலனிலையாகும்

இப்போது அதிகமாக மோதல் வருவதை காண்கிறோம்

இதனை கண்டும் காணமல் நின்று கொண்டிருக்கும்
சில காவலர்களால் பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது

அதனால் நீங்கள் மக்கள் நலனை மனதில் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பேருந்திலும் கட்டயமாக ஒரு பெண் காவலர் ஒரு ஆண் காவலர் இருக்கவேண்டும்

அனைத்து பேருந்திலும் கதவுகள் அமைக்க வேண்டும்

பேருந்தில் தொங்கிய படி செல்பவருக்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் வசூலிக்க வேண்டும்

மீறி தகராறு செய்யும் மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக இந்த
மாநிலம் மட்டும் அல்லாது வேறு எந்த மாநிலத்திலும் அவரால் படிக்க முடியாத அளவுக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும்

அவர்கள் மாணவர்களாக இல்லாத பட்சத்தில் அவருக்கு அதிக பட்ச தண்டனையாக 5 வருடம் சிறைவாசம் அனுபவிக்கவேண்டும்

இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதன் மூலம்

நம் தமிழகத்தின் மக்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் எவர் ஒருவரும் இது போல் இனி செய்யாதிருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு
மக்கள் நலனை விரும்பும் நாங்கள்

இந்த பதிப்பினை ஒரு வெள்ளை காகிதத்தில்
முறைப்படி எழுதி மாநகர மேயரிடம் அளிக்கப்பட உள்ளது

நண்பர்களே இதை படித்து விட்டு ஏதும் தவறு இருப்பின் தெரியப் படுத்தவும்
அது மட்டும் இல்லாது நீங்களும் என்னுடன் மேயரை நேரில் சந்தித்து இக்கடிதத்தினை அளிக்க விரும்பி என்னுடன் வந்தால்
நமக்கு மிகவும் சிறந்த முறையில் இதற்கான பதில் கிடைக்கும்
வர விருப்பம் இருக்கும் நபர் தெரியப்படுத்தவும் அதன் அடிப்படையில் நான் மேயரை சந்திக்கும் தேதியினை அறிவிப்பேன்

எழுதியவர் : ரவி.சு (9-Feb-14, 9:12 pm)
பார்வை : 425

மேலே