த்திகம் பேசுவோம்

"...த்திகம்" பேசுவோம்
======================================ருத்ரா

மனிதன் கற்பனையல்ல‌
அவன் பொருள்.
கடவுள் பொருள் அல்ல‌
அது கற்பனை.
மனிதனின் கற்பனை
கடவுள்.
ஒரு பாம்பின் வால்
அந்த பாம்பின்
வாய்க்குள் இருக்கும்.
மனிதனின் அறிவு
வாலாய் நீண்டு
மீண்டும்
அவன் வாய்க்குள் தான்.
மூளையின் கதிர்கள்
மூளைக்குள்ளே தான்.
வட்டம் அடிக்கும்.
இன்னொரு மூளையை
அந்த மூளைக்குள்ளிருந்து
முங்கி எடுப்பதே அறிவு.
மூளை தனக்குள்ளே
மடங்கிக்கிடப்பதே
தேக்கம்.
தேக்கம் எப்போதுமே
ஆக்கம் இல்லை.
இயக்கம் இல்லை.
தேக்கம் இயக்கம் ஆவது
இயக்கம் தேக்கம் ஆகி
மீண்டும் இயக்கம் ஆவது
இதுவே ஆற்றலின்
அழிவின்மைக்கோட்பாடு.
(கன்சர்வேஷன் லா )
மதங்கள் இயங்க வேண்டும்.
மதங்கள் குழம்ப வேண்டும்.
குட்டையாய் கிடப்பது ஆத்திகம்.
குழம்பி இயங்குவதே நாத்திகம்.
ஜாக்கிரதை
நாத்திகமே
ஒரு மதமாகி விடப்போகிறது!

======================================

எழுதியவர் : ருத்ரா (10-Feb-14, 4:57 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 62

மேலே