புதிதா புதிரா

அலை கடலில் களம் கண்டோம்!
ஆழீ பேரலையில் உயிர் மீண்டோம்!!
புயல் வந்தபோதும்
பூகம்பம் நிகழ்ந்த போதும் எதிர் கொண்டோம்!

எங்கோ ஓர் உயிர் பிரிந்தாலும்
இங்கே கலங்கி தவிப்போம்!!
இது தமிழனின் உணர்வு!

நம் தாயை நொந்தேனும்
வந்தாரை வாழ்விப்பது
தமிழனின் மாண்பு!!

வாரி கொடுப்பதிலும்
தோள் கொடுப்பதிலும்
பிறரை தடுப்பதிலும்
நமக்கு இணை நாமே!

பிறர் நலனில் கரிசனம்
காட்டிடும் நம்மினம்
அழிவை நோக்கி சென்றிட காரணம்
நம்மினம் நம்மை தொலைத்து
பிறரை காத்திட உயிர்மூச்சாய் உழைப்பதினால் ....!

வீரம் பேசும் நம் சரித்திரம்!
தமிழினத்தை கொன்று குவித்த போதும்
நின்றே பார்த்ததேனோ!!?
பரிவும் பாசமும் பிறர்க்கு தந்து
உன் முதுகில் சுமப்பதேனோ!!?

பிறரை ஆளா விட்டாலும் பரவாயில்லை
தமிழினம் வாழ வழி செய்!!
சுயநலத்தாலே இழந்தது
உன் சுதந்திரத்தை என்பதையும்
எப்போது தான் உணர்வாயோ!!
பொறுமை காப்பதை கோழைதனமாக்கி
உனக்கு நீயே வைக்காதே முற்றுப்புள்ளி.

எழுதியவர் : கனகரத்தினம் (10-Feb-14, 1:45 am)
பார்வை : 190

மேலே