எதுவும் வீண் இல்லை இந்த எழில் உலகில்

தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டிலும் - செடி
தூக்கி வளர்க்கவே தொட்டிலாகுது..........நாம்
தூய மனதோடு கையாண்டால் பற்றிய
தீயும் தீபமேற்ற கை கொடுக்குது......!!

தன்னை அழித்து பிறரை கெடுக்க இறைவன்
தரணியில் எதையும் படைக்க வில்லை
தன்னை புரிந்து உண்மை தெளிந்து மனிதத்
தன்மை வளரவே அறிவு தந்தான்....!!

உண்மை இதுவென அறிவோம் நாம்
உளத்தால் இன்பம் அடைவோம் நாம் - இனி
உதாசீனம் செய்ய ஏதுமில்லை
உலகில் அன்பை வளர்த்திடுவோம்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (12-Feb-14, 1:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே