நீ தான் அழகு
என் எழுதுகோல் எடுத்த
எச்சத்தினை மிச்சம் வைக்காமல்
வார்த்து எடுத்து உனக்கான
வார்த்தைகளை கோர்த்து
வரிகளை நேர்த்தியாக்குகிறேன்...!!!!
மூன்று புள்ளி ...
நான்கு ஆச்சிரியகுறி !!!!
கொஞ்சம் எதுகை
கொஞ்சம் மோனை
திருப்தி வரவில்லை எனக்கு,
திருப்பி திருப்பி படித்தாலும்
ஏதோ ஒன்று குறைகிறது.....
அடிப்போடீ....
உன்னை விட அழகு ஏதுமில்லை
எனக்கு....