நல்ல நண்பன்
நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல
கால் பண்ணான்...
நண்பன் 1 :"டேய் மச்சி ... எப்படிடா இருக்க??"
நண்பன் 2:"நல்லா இருக்கேன்டா ... நீ
எப்படி இருக்க?"...
நண்பன் 1 :"ரொம்ப நல்லா இருக்கேன்டா ...
மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா .."
நண்பன் 2 :"அப்படியா?"
நண்பன் 1 :"ஆமாடா ... நான் சொல்லியிருந்தேன்ல
ஒரு பொண்ணை ரூட் விடுறேன்னு ...
அது செட்டாயிரும் போலிருக்குடா ...
நல்ல வசதியான இடம் ... ஒரே பொண்ணு ....
சும்மா உட்கார்ந்தே ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம்டா"
நண்பன் 2 :"ம்ம்ம்"
நண்பன் 1 :"இப்போ எனக்கு நீ
ஒரு உதவி பண்ணனும்டா"
நண்பன் 2 :"சொல்லுடா பண்றேன்"
நண்பன் 1 : "நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் ...
என்ன கொடுக்கலாம் ... நீ கொஞ்சம் சொல்லேன்"
நண்பன் 2 :"உனக்கு சொல்லாம
யாருக்குடா சொல்ல போறேன் ? என்னோட போன்
நம்பரை கொடுடா"
(("டமார்"னு ஒரு சத்தம் ...
போனை உடைச்சிட்டானோ!))