சுதந்திரம்
“பெண்களும் சுதந்திரமும்”
பெருமை போற்றும்
வானொலி நிகழ்ச்சிக்காக
வந்திருந்த நிருபர்...
இல்லதரசியிடம்
இயல்பாய்
அறுபத்தி ஏழாவது சுதந்திரம்பற்றி
அபிப்ராயம் கேட்டார்...
ஒரு கணம் யோசித்தவளாய்
உள்ளிருந்த மகனிடம்
உரக்கச்சொன்னாள்..
“அப்பாவை கூப்பிடு” !!!!!!!