காமுகக் காதலனைப் பிளந்திடு துண்டாய் - மணியன்

இரவினில் தூக்கம் இல்லை
இடையினில் துக்கம் தொல்லை
படர்ந்திடக் கொடியும் இல்லை
பாவமிந்தப் பாவி முல்லை. . . . . . .

***** ***** *****

கனவிலும் அவன் முகமே
கடலிலும் பெரிதிவள் அகமே
காதலன் பக்கம் இல்லாக்
காரிகை வெறும் பெட்டகமே . . . .

***** ***** *****

வேகாமல் வெந்து தணிந்தாள்
பாராமல் நொந்து கரைந்தாள்
ஊராரும் உறங்கிய பின்னும்
உறங்காது இவளிரு கண்ணும் . . . .

***** ***** *****

பேசாமல் பேசிச் சிரித்தாள்
கூசாமல் கொஞ்சி மகிழ்ந்தாள்
பாசமாய்ப் பழகிய அன்பன்
வேசமாய்ப் போனது தகுமோ . . .

***** ***** *****

படைத்தவன் பக்கம் அமர்ந்தா
பாவைக்கண் நீரைத் துடைப்பான்
பாரெல்லாம் சுற்றி அலைந்து
பாதையைத் தொலைத்திட நின்றாள் . . .

***** ***** *****

காதலின் வலியது கண்டு
காமனே எழுந்திடு வெகுண்டு
கன்னியர் வாழ்வினில் ஆடிடும்
காளையரைப் பிளந்திடு துண்டாய். . . .

காதலும் காமமும் ஒன்றாய்க்
கண்டவர் வாழ்வே குன்றும்
கோவலன் கதை முடிந்தற்றே
கோமகள் கண்ணகியே கொல்வாய். . . . . . .

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (18-Feb-14, 1:16 am)
பார்வை : 120

மேலே