கவிதைக்காய் கருத்து வேண்டும்

கருத்துகளுக்கு கவி புனைந்து
கற்பனையை பணயம் வைத்து
கவிதை எனும் கருப் பொருளை ்
கடை சரக்காக்கி
காசுக்கு விற்று
கல்லா நிரப்புவோர்
கவிஞரோ?
துதி பாடி புகழ்தேடி
சரணடைந்து
சாமரம் வீசி
தன்னை விற்று
தமிழ் வளர்ப்பவன்
கவிஞானாமோ?்

கவிதைக்கு கருத்து வாங்கி
கருத்தினை உள்வாங்கி
உள்ளான கருத்தை
உருப்போட்டு
உயிர்ப்பான செந்தமிழை
உவகையோடு எடுத்தியம்ப
உயிர்கொண்டேன்
உண்மை கொண்டேன்....
என் கருத்திற்கு
எதிர் கருத்தெதற்கு?

எழுதியவர் : சித்ரா ராஜ் (18-Feb-14, 1:07 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 100

மேலே