பொறுமை கடல் பொறு மனமே
ஏமாற்றங்கள் காணாமல் மாற்றம் வராது
பித்தம் தெளிந்த பின் சித்தன்
யுத்தம் காணாமல்...
வெற்றி சிறக்காது
புத்தனும் போதித்தான் ...
இயேசுவும் தோன்றி உதித்தான்
அன்பை விதைத்தான்
முளைத்து விடாமல்
மனிதன் கெடுத்தான்
இரத்ததை காண துடிக்கின்றாய்
தினம் யுத்த களத்தில் கிடக்கின்றாய்
மண்ணை அடைய ...
மனிதன் செய்யும் யுத்தம்
இறுதியில் மண் தானே வெல்லும்
பித்தம் தெளியும் காலம்
சித்தனாய் ஆவாய்
ஏமாற்றம் கண்டோம் மாற்றம்
அன்பாய் துளிர் விட்டு இம்மண்ணில்
வானமாய் விரிந்திடும் விரைவில்...
அவ்வெற்றி அளவில் சொல்லிட முடியா
ஆனந்த பெருங்கடலல்லவா...
அதுவரை நல்லோர் மனமே நீ பொறு