பெரிய வியாபாரி

ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர் இருந்தார்.

அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர் செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருடைய கடையை இரவில் காவல் காக்கும் காவல்காரன் விரைந்து வந்து அவரிடம் வணங்கி நின்றான்.

அவனைக் கண்ட வியாபாரி என்ன செய்தி ஏன் இப்படி வேகமாக வருகின்றாய்? என்று கேட்டார்.

அக்காவல்காரன் பணிவுடன் ஒரு செய்தியை உங்களிடம் சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.

நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்.

அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும் கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.

அதில் பயணம் செய்த டிரைவர் உள்பட நீங்களும் இறந்து விடுகின்றனர்.

ஆகையால் உங்கள் பயணம் இன்று வேண்டாம். உங்கள் பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக் கொள்ளுங்கள், இதை சொல்லத்தான் ஓடி வந்தேன். என்று கூறினான்.

வியாபாரி அதைக் கேட்டதும் சிறிது சிந்தித்தார்.

பிறகு தம் பயணத்தை மற்றொருநாள் வைத்து விட்டார்.

காவற்காரன் கூறியபடியே வியாபாரி பயணம் செய்வதாக இருந்த கார், டிரைவர் ஓட்டி சென்ற போது ஓர் ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது.

அதில் பயணம் செய்வதர்கள் மற்ற பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டனர்.

வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத் தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.

அதன் பின்னர் காவற்காரன் கனவு கண்டதால் இரவில் நன்றகத் தூங்கி இருக்கிறான்.

எனவே இவன் இரவுக் காவலுக்கு தகுதியற்றவன் என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன் கனவு கண்டதன் பலன் இது என்று நினைத்து வருத்தத்துடன் வீட்டிற்குச் சென்றான்.

எழுதியவர் : முரளிதரன் (20-Feb-14, 9:49 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : periya viyaabaari
பார்வை : 154

மேலே