ஆபத்தான சிரிப்பு

புதிதாக திருமணம் ஆன பெண், தன்னுடையா அம்மாவிற்கு போன் செய்து பேசுகிறாள்.

"அம்மா இன்னிக்கு வீட்ல ஒரே சண்டை"

"இதெல்லாம் எல்லார் வீட்டுலயும் நடக்கிறதுதாம்மா. நானும் உங்கப்பாவும் கூட அடிக்கடி சண்டை போடுவோம்"

"அது எனக்கு தெரியும்மா. அதனாலதான் உன்கிட்ட கேட்குறேன் .. சரி இப்போ அந்த பொணத்த என்ன செய்றது??

"???????????????????????"

*****************************************************************************************

மகனை கோபத்தில் திட்டினார் அப்பா,

"டேய்.. நீ நினைக்கற மாதிரியெல்லாம் வாழனும்னா ... நீ அம்பானி வீட்ல தான் பிறந்திருக்கனும்"

மகன் பொறுமையா பதில் சொன்னான்,

"அப்போ ... நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்"

(வில்லங்கம் ...வேறெங்கும் இல்லை !!!!!!வீட்டுலயே ...)

*****************************************************************************************

எழுதியவர் : ஜேக்” (20-Feb-14, 7:58 pm)
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே