+அன்போ இங்கே தனியாய் அலையுது+

மழை பெய்ய
பூமி குளிர்ந்தது
ஏழைவீடோ
கண்ணீர் வடித்தது

புயல் வீச
மரமும் சரிந்தது
ஏசி வீடோ
எதிர்த்து நின்றது

வெயில் கொளுத்த
நிலம் வெடித்தது
நிலத்தில் இருந்த
செடியும் துடித்தது

தென்றல் காற்று
மனதை நிறைத்தது
சன்னல் ஓரம்
கண்கள் முறைத்தது

கட்சி கொடிகள்
உயர பறந்தது
தேசக் கொடிக்கோ
மோட்சம் கிடைத்தது

பணமே தினமும்
அன்பை அளந்தது
அன்போ இங்கே
தனியாய் அலையுது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Feb-14, 12:55 pm)
பார்வை : 169

மேலே