மன வெளிகள்

விரட்டிக் கொண்டே
வரும் வானவில்லின்
ஒரு நுனி
எனைக் கட்டி இழுத்துப் போகிறது....

வெயில் மழையாகி
மழை பனியாகி
பனி புதிராகி
புதிரில் பூக்கள் விரிகிறது...
பூக்களின் புதுப் பெயர்
என் தனிமை....

தேடல் விதி என்று
சொல்கிறது...
மௌனம் சதி செய்து
வெல்கிறது....

எழுதா கவிதைகள்
முதிரா பறவைகள்....
சாய்கிறது மன 'வெளி'கள்
சாய்க்கிறது உன் மொழிகள்...

ஆத்திரம் தீராத
என் இரவுகள்
சாத்திரம் தாங்காது....
இரவுக்கு சிறகு முளைத்ததாக
சிறுகதை எழுதிவிட்டேன்.
தீரவில்லை எதுவும்.....

பூவுக்குள் ஒளிந்து கொண்ட
புது பேனா,
ஒரு பார்வை- சிறு கவிதை
என்றெழுதி எனை வைத்தது....
கண்காட்சி நானாக
காண நீ வருவாய் என்றே
உன் வானம் நீள்கிறது.....

நீட்சிகளின் தொகுப்பில்
என் சித்திரம்....
காட்சிகளின் வியப்பில்
உன் நட்சத்திரம்...

மடல் தீட்டி
நீ அனுப்பும்
சிறு பறவையில்
திரு திருவென விழிக்கிறது
என் வானம்.......

எழுதியவர் : கவிஜி (25-Feb-14, 10:02 pm)
Tanglish : mana velikal
பார்வை : 85

மேலே