ஆயிரம் அப்பாக்கள் , ஆயிரம் அம்மாக்கள்

தாய்க்கு வலி கொடுத்து பிறந்தோம்
இருந்தும்
அவள் நம்மை வெறுப்பதில்லை.

தந்தைக்கு தோளில் சுமை கொடுத்தோம்
இருந்தும்
அவர் சுமக்க மறந்ததில்லை.

தொட்டில பாசம்
சுடுகாடு வரை என்பார்கள்
கொள்ளி வைத்து
சுடுவது பிள்ளை என்பதனால்
சுகமாய் உறங்குகிறார்களோ??

ஆயிரம் அப்பாக்கள் , ஆயிரம் அம்மாக்கள்
இந்த பூமியில்,
ஆயிரம் பணிகளை அலங்கரித்தாலும்
பிள்ளைகளின் விசயங்களில்
அனைவரும் அப்பாவிகளே...

எழுதியவர் : விஜய் கணேசன் (26-Feb-14, 12:32 pm)
பார்வை : 109

மேலே