ஐ டி இல் பெண்கள்
வானுயர்ந்த கோபுரமாய் விளைந்து நிற்கும் கருதுகலாய் உலகத்தை ஒருதிரையில் ஒளித்து வைத்திருக்கும் இன்டர்நெட் நிறுவனம் சோழ சாப்ட் வேர்(அடையாளத்திற்காக )12மாடியில் பரபரப்பாய் இயங்கும் அது ஒரு வெள்ளி கிழமை ....காலை பொழுது ....
அன்று இண்டர்வியு நடக்கிறது ....
நிறைய ஆண்களும் பெண்களும் குளிமியிருக்க அழகாய் நம் கதாநாயகன் மெதுவாய் உள்ளே நுழைந்தான் சுமன் ஆம் கதாநாயகன் பெயர்
செக்யூரிட்டி இடம் மெதுவாய் என்ன சார் இன்று நம் அலுவலகத்தில் இவ்வளவு கூட்டம்
செக்யூரிட்டி: சார் இன்று ஜாவா இண்டர்வியு சார் ...
சுமன் சிரித்து கொண்டே என்ன சார் வழக்கம் போல 50 பேருக்கு 200 பேர இண்டர்வியு பண்ணுவாங்க ...
செக்யூரிட்டி: தெரில்ல சார் நீங்க டீம் லீட் தானே சார்
சுமன்: என்ன சார் திடிர்ன்னு இப்படி கேக்குறிங்க நான் டீம்லீட் தான் அதுகென்ன சார் ...
செக்யூரிட்டி: அது இல்ல சார் நீங்களும் ஒரு ரவுண்டு இண்டர்வியு பண்ணுவிங்க தானே
சுமன்: ஆமாம் ...பைனல ..
ஓகே சார் நான் உள்ள போய் வேலைய பார்கிறேன் செல்ல நினைக்கையில் இண்டர்வியு வந்திருந்த அனைவரையும் ஒருமுறை பார்த்துக்கொண்டேன் ஆண்களும் சரி பெண்களும் சரி சிலர் படித்த திமிரில் கால்மேல கால்போட்டு சிலர் அடக்கமாய் சிலரின் உடைகள் கம்பீரமாய் சிலர் எளிமையாய் வருசைகரமாய் அமர்ந்த அனைவரையும் பார்த்து கொண்டே வரும் போது ஒரு பெண்ணின் மீது மட்டும் என் கண்கள் நிலைத்து நின்றது
அவளின் தோற்றமோ அவளின் ஆடை அழகோ என நீங்கள் நினைக்கலாம் அதற்கும் மேலாக அடக்கமும் அவள் உடையில் தெரிந்த எளிமையும் ஏழ்மையும் இளமையும் மனதில் நடுக்கமும் என்னை நிலைக்க செய்ததா என எனக்கு தெரியவில்லை
நானும் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விட்டேன்
2 மணி நேரம் கழித்து என் ரவுண்டு இண்டர்வியுவுக்கு வெளிவந்தபோது
அவள் இருக்கமுடனும் கண் கலங்கி
அதை வெளிகாட்டமலும் இருந்த அந்த சூழல் என்னை ஏதோ செய்தது என்னை அறியாமலே அவள் அருகில் நெருங்க என் மனம் தவித்தது
அவளிடம் சென்று ஹாய் சொல்லி என்னை அறிமுகம் செய்து அவளை பற்றிய விபரம் கேட்டேன்
அவளும் தயங்கி தயங்கி என்னை பார்த்து சார்...என் பேர் வளர்மதி எம் எஸ் விண்டோ சாப்ட் முடிச்சிருக்கேன் இன்னும் எக்சற்றா எக்சற்றா தகவலை சொல்லி தான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து உடன் பிறப்புகள் யாரும் இல்லை அம்மா அப்பா கூலி தொழிலாளி...!
(நான் உடன் இடைமறித்து) அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்று இப்ப சொல்லுங்க என்றேன்
அவளும் காலர்ஷிப் வாங்கி மேலும் வங்கி கல்வி கடன் வாங்கி எப்படியோ படித்து முடித்தேன் என் குடும்பத்த காப்பதனும்னு கிராமத்த விட்டு நகரம் வந்திருக்கேன் இங்க யாரும் உறவுகளோ சிபாரிசுக்கு ஆளோ எனக்கு கிடையாது சார் எப்படியும் கடவுள் துனையோட தன்னம்பிக்கையோட வந்திருக்கேன் சார்
சுமன்: குட் உங்க தன்னம்பிக்கை உங்களை நிச்சயம் காக்கும் அது சரி அப்புறம் ஏன் சோர்வா இருக்கீங்க !
சற்று அமைதிக்கு பின்
சார் எப்படி
சொல்றதுன்னு தெரியல முதல் ரவுண்டு போறவரைக்கும் தைரியமாதான் இருந்தேன் ஆனா இப்ப ....சொல்லிக்கொண்டே அழுகிறமாதிரி இருந்தது
வளர் ஒருநிமிஷம் எதுக்கு கன்கலங்கிரா இப்ப என்ன ஆச்சு ...ரிசல்ட் என்ன ?
சார் என்னோட ஒட்டு மொத்த கனவும் ஆசையும் கலைஞ்சு போனமாதிரி இருக்கு சார் என் நம்பிக்கை ஒடஞ்சு போச்சு சார் ....சொல்லி கொண்டே அழுகிறாள்
இந்தா பாரும்மா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கிறது தான் என்ன நடந்துச்சு சொல்லு அப்புறம் நான் என்னபண்ண முடியுமுன்னு முயற்சிக்கிறேன்
சார் காலேஜ் முடிச்சா வேல கிடைக்குமுன்னு என் ஆசைகள மூட்டைகட்டி வச்சுக்கிட்டு பட்டணம் வந்தேன் இங்கு இண்டர்வியூ நடக்குதுன்னு சந்தோசமா வந்தேன் ஆனா இங்க வந்த பிறகு தான் வேலை கிடைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லைன்னுபுரிஞ்சிகிட்டேன்
எக்ஸ்ப்ரியான்சே இல்லன வேலைகேடயதாம் அப்படி இல்லன கம்பெனில இருக்கிற யாராவது ரெபர் பண்ணனுமாம் இல்லேன்னா கன்சுல்டன்சி மூலமா சேரலாம்ன்னு சொல்றாங்க இருந்தவங்கள விசாரிச்சா கன்சுல்டன்சி போன பணம் செலவு பண்ணா தான்கெடைக்குமாம் .....
எனக்கு யாரும் இல்லை சார் பணமும் இல்லை சார்
என்ன பன்றதுனே தெரியல சார்
அவள் சொல்லி முடிக்கையில் என் கண்ணில் ஓரம் நீர் கசிந்தது அவ்வளவு அழுத்தம் வறுமையின் வலி உணர்ந்தவன் நான் ...அந்த பெண்ணிடம் கொஞ்சம் வெயிட் பண்ணு என்னால ஏதும் பண்ணா முடியும்னு பார்கிறேன்...
சார் ப்ளீஸ் சார் உங்க பதிலுக்க்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன் ...
சரி போய் வரிசையில் உக்காருங்க ...ஓகே சார் ...
அதன் பிறகு யார் யாரிடமோ பேசி என் பொறுப்பில் நானே என் டீமில் எடுத்துகொள்வதாக சொல்லி அவளுக்காக எத்தனை கெஞ்சல் காரணம் அவள் சொன்ன அந்த வரிகள் ஏழை குடும்பம் யாரும் உடன் பிறப்பு இல்லை வங்கி கடன் நம்பிகையோட வந்துஇருக்கேன் இதுஎல்லாம் என் மனதில் இனம் புரியா தவிப்பு ...
வளர்மதி ....வளர்மதி ....
சார் ...
வாழ்த்துக்கள் வளர்மதி
எதுக்கு சார்
உனக்கு வேலை கெடச்சாச்சு....
அப்போது அவள் முகத்தை பார்க்கவேண்டுமே ...
அத்தனை சந்தோசம் அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது
தழு தழுத்த குரலில் அவள் தே...ங் ...கி ...யூ சார்
உங்களை தான் என் கடவுளா நினைக்கிறேன் சார் என் வாழ்க்கைல உங்கள மறக்கவே மாட்டேன் சார் ...
நான் ...ரிலாக்ஸ் எதுக்குமா பெரிய பெரிய வார்த்தை பேசற ...ஏதோ என்னால முடிஞ்சது
அப்புறம் ஸ்மால் ரிகோஸ்ட் முதல்ல சார் போடுறத நிறுத்து சுமனு கூப்பிடு இல்லை உன் அண்ணனா நினச்ச அண்ணா னு கூப்பிடு ...
அவள் உடனே சரி அண்ணா ...
பின் ஜாயினிங் பார்மல்ட்டி முடிச்சு உடனே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொடுத்தேன் அப்புறம் பட்டணத்துக்கு புதுசுன்னு சொன்ன எங்க தங்குவ ...
அண்ணா தூரத்து சொந்தத்துல உங்களமாதிரி ஒரு அண்ணன் வீடு வேளச்சேரில இருக்கு ரெண்டு நாளைக்கு தாங்கிகிட்டு வேற இடம் பார்க்கணும் ...
ஓகே ...ஓகே ...மண்டே வந்து என்ன பாரு
ஓகே ...அண்ணா ரொம்ப நேரமாச்சு நான் கெளம்புறேன் மண்டே வந்து பார்கிறேன் ...
பாய் சொல்லி நானும் பிரிந்தேன் ...
மண்டே காலை 9 மணி எனக்கு முன் வந்து அலுவலகத்தில் காத்திருந்தாள் வளர் ...நான் அப்படித்தானே கூப்பிடுவேன்
ஹாய் வளர் ...
வணக்கம் ....அ...ண்..ணா...சொல்லுங்க
பரவாயில்லை அண்ணனே கூப்பிடு பட் ஆபிஸ்ல சார்னு கூப்பிடு ஓகே வா ...
சரி வா உள்ளே போலாம் ...
ஹாய் ...ப்ரெண்ட்ஸ் ...இவங்க பேரு வளர்மதி நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்காங்க ...ஒரு விதத்தில என் தங்கச்சி மாதிரி சோ எல்லாரும் கோஅப்ராட் பண்ணுங்க ப்ரீத்தி இந்த பொண்ணுக்கு என்ன ஒர்க் சொல்லிகுடுங்க இன்னைல இருந்து நம்ம பேமிலில இவளும் ஒருத்தி ...ஓகே
எல்லாரும் கோரசாக ....ஓகே ...ஓகே ..
தேங்க்ஸ் ....பிரெண்ட்ஸ் ...
அதிலேருந்து என்னிடம் தினமும் நிறைய பேசுவா...எந்த சிக்கலா இருந்தாலும் சேர் பண்ணிக்குவா ...
கடவுள் மிக பெரியவர் ...யாருனே தெரியாத அந்த பெண்ணை இங்கு கொண்டுவந்து என் ஏக்கத்த தனிச்சு தங்கசியா சேர்த்ததுக்கு நன்றி...மனசால பிரே பண்ணிகிட்டேன்
சகதோழி இந்துவிடம் சொல்லி அவளையும் அவள் மேன்சனில் தங்க வைக்க ஏற்பாடும் செய்து கொடுத்தேன்
மாதங்கள்...ஓடின ....
ஒருநாள் ....
அண்ணா என்ன வேற ப்ரஞ்க்கு மாத்திட்டாங்கனு ஹெஜ் .ஆர் சொன்னாங்க ...
எனக்கு முன்பே தெரியும் இருந்தாலும் வெளிகாட்டிகமா அப்படியா ...
யாரும் சொல்லலையே....!
சரி விடும்மா எங்கிருந்தாலும் நம்ம பேசிக்குவோம்
அவளை சமாதானம் செய்தேன் ...எனக்குள் வருத்தம் தான் ...
சில நாட்களுக்கு பிறகு ...
அழைப்பில் என் தங்கை...அண்ணா எப்படி இருக்கீங்க ...இங்க வந்ததும் ரொம்ப பிசி அதான் தினமும் பேச முடியல
சாரி ணா ...
அதவிடும்மா வேலை எப்படி போகுது பாத்து கவனமா இருந்துக்க ...அப்புறம் அண்ணனுக்கே உரிய அக்கரையில் சில உபதேசங்கள் ...
அவளும் அக்கரையாய் ...கேட்டது போல ...ம்...ம்...ம்....கொட்டுகிறாள்
அதன் பிறகு வேலை பளுவில் இருவரும் பேசிக்கொள்ள நேரமில்லை ....
சில மாதங்கள் கழித்து ...ஒருநாள் ...
என் போன் ஒலித்தது ....
எடுத்து பார்த்தால் புது நம்பராக தெரிந்தது ....ப்ரீயா தான் இருந்தேன் அன்று ..
.
கால் பட்டன் அழுத்தி ...ஹலோ ...
மறுமுனையில் ஒரு தழுதழுத்த குரலில் வயது 50க்கு மேல் காட்டியது
மீண்டும்
ஹலோ ...சுமன் தம்பிகளா !
ஆமாம் நீங்க ...!
தம்பி நான் வளரோட அப்பா பேசுறேன்
அடடே சொல்லுங்க அப்பா ..(அவள் குடும்பம் வரை நெருக்கம் இருந்ததால் )
நல்ல இருக்கியா தம்பி ...
நான் நல்லா இருக்கேம்ப அம்மா மத்தவங்க எல்லாம் நலமா ...
என்ன விஷயம் திடிருன்னு போன் பண்ணி இருக்கீங்க ....!?
அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி ரெண்டு வாரமா வளரு ஊருக்கும் வரல
போன் பண்ணாலும் பிசிய இருக்கேன்
அப்புறம் பேசுறேன்கிரா
அதான் உங்கள கேட்ட தெரியுமேன்னு
போன் பண்ணுனேன் ...வளரு நல்லா இருக்காலப்ப உடம்புக்கு ஒன்னும் இல்லையே !(நானே வளர பாத்து பல வாரமாச்சு )நல்லா இருக்கப்பா ஏன் அப்படி கேக்கிரிங்கப்பா!
அது ஒன்னும் இல்ல தம்பி போன மாசம் வந்தப்ப சம்பளம் கம்மியா இருந்துச்சு எம்மா கம்மின்னு கேட்டேன் அதுக்கு அப்பா சும்மா என்னை சின்னபொண்ண மாதிரி ஒன்னும் தெரியாதுன்னு நெனசுகிட்டு கேள்வியெல்லாம் கேக்காதிங்க உங்களுக்கு என்ன செயணுமோ அத சரியா செய்வேன் .
அதுகில்லமா ...செலவு நெறைய செய்யாதம்மா எவ்வளவு கஷ்டம் பட்டமுனு உனக்கே தெரியும் ...அதனால
அதனால என்னப்பா நீங்க தான் சம்பாரிச்சு சேத்து வைக்கல...எந்த சந்தோசத்தையும் அனுபவிக்க முடியல ...இப்ப நான் கஷ்டப்பட்டு காசு சேர்த்தும் அதுல சந்தோசமா இருக்கிறது கூட உங்களுக்கு பொறுக்கலையா ...
வளரு நான் என்ன சொன்னேன்னு இப்படி கோவிக்கிற ...உன் நல்லதுக்கு தானே சொல்றேன் ..
எது நல்லது கெட்டதுன்னு எனக்கு தெரியாத நான் படிகலையா நீங்க சொல்லிதரமாதிரிய நான் இருக்கேன் இனிமேல் ஊருக்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு வேகமா கெளம்பி போய்ட்ட ...அழுத குரலில் ...
அதை கேட்டு எனக்கே ஒருமாதிரி ஆயிடுச்சு அப்படி பட்ட பொண்ணு மாதிரி பார்த்த வளர தெரியலையே ....மனசில் எண்ணம் ஓட ...சரி அப்பா நீங்க வருத்தபடதிங்க நான் வளர பார்த்து பேசி அடுத்தவாரம் ஊருக்கு வரசொல்றேன்...
ரொம்ப சந்தோசம் தம்பி என் பொண்ணு கண்ணுக்குள்ள நிக்கிறா அடுத்தவாரம் எதிர் பார்போட இருப்போம் தம்பி அப்ப நான் வச்சுடறேன் ....
போன் கட் ஆயிடுச்சி ....என் மனசில் பல கேள்வி ....கொஞ்ச நாலா வளரு சரியாய் பேசறதில்லை ...இப்படிஎல்லாமா பேசுரா
நான் ரொம்ப நல்லா பொண்ணுன்னு நினைச்சேனே
குடும்ப கஷ்டத்த நினச்சு தானே இவ்வளவு உதவியும் பண்ணுனோம்
அப்புறம் பணம் வந்ததும் மனம் மாறிட்டாலா இல்ல வேற ஏதாவது நம்மகிட்ட சொல்லமுடியாத சிக்கலில் மாட்டிகிட்டலா ஏதுவ இருந்தாலும் என்கிட்டே சொல்லுவாலே என்ன ஆச்சு ....சரி நாளைக்கு அவ மேன்சன்ல போய் ஒரு எட்டு பாத்து பேசிட வேண்டியது தான் ....
மறுநாள் ....விடிகாலை
மணி 4.00
போன் ஒலித்தது ...
வளர் தங்கி இருக்கும் மேன்சன் நம்பர் அது ...
போனை எடுத்து காதில் பொருத்தி ...ஹலோ ...
மறுமுனையில் பதட்டமாய் ஒரு குரல் ஹலோ ....சார் நான் பிரிதீ பேசறேன்
என்னுடன் பணியாற்றும் சக தோழி
சொல்லுமா ...
சார் நீங்க கொஞ்சம் மேன்சனுக்கு வரமுடியுமா ?
ஏன் என்னாச்சு !யாருக்கு ப்ரொப்லெம்
காலைல வரேம்மா வளர பார்க்கணும்
சார் ரொம்ப அவசரம் சார் இப்ப நான் போன் பன்னுனதே அதனாலதான் சார் வளரு வயிற்று வலீலா துடிக்கிறா சார் விடிகாலை நேரம் அதனால ஆம்பிள்ளை யாரும் இல்லை
அவசரமா ஆஸ்பிட்டல் போகணும் கொஞ்சம் வரமுடியுமா சார்
வளருக்கு வைத்துவலினு சொன்னதும் பதட்டம் தொற்றிக்கொள்ள ....இந்தா உடனே வரேம்மா ....
வேகமாக கிளம்பி பைக்க எடுத்துகிட்டு மேன்சன் நோக்கி பறந்தேன்
10நிமிசம் மேன்சன் வாசலில் வாச்சுமேனிடம் விசயத்தை சொல்லி அவரையும் அழைத்து கொண்டு அறைக்கு சென்றோம்
வளர் வலியால் துடித்து இப்போ மயக்கத்தில் விழுந்தால் ...
அதற்குள் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்க அதில் அவளை வாரி போட்டுகொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு நானும் பிரிதீயும் சென்றோம் ,உள்ளே மருத்துவர் பரிசோதிக்க
மெதுவாய் பிரிதிஇடம் என்ன நடந்ததுதுன்னு விசாரிச்சேன்
சார் 10 மணிக்கு ரூம்க்கு வந்தா வெளில சாப்பிட்டேன்னு சொல்லிட்டு படுக்க போய்ட்ட 1.30 மணி இருக்கும் பிரிதி னு குரல் கேட்டு எழுந்து பார்த்த வயித்த புடுச்சிகிட்டு அழுவறா
நான் ஏய் என்னடி ஆச்சு ஆஸ்பிட்டல் போலாம் வாடினே
அவள் கொஞ்சம் நேரம் பாக்குலமுனு சொல்லிட்ட
அப்புறம் வலி ரொம்ப பொறுக்க முடியாமதான் உங்களுக்கு போன் செய்தேன் அதுக்கப்புறம் மயங்கிட்டால்
டாக்டர் வெளிவந்து இந்த பேசண்டோட யார் வந்திருக்கா அவார என் ரூமுக்கு வர சொல்லுங்க
நான் போனேன் வணக்கம் டாக்டர்
டாக்டர் பயப்படும்படி ஏதும் இல்லையே
டாக்டர் என்னை பார்த்து நீங்க அந்த பொண்ணுக்கு என்ன வேண்டும்
டாக்டர் நான் அவளோட அண்ணன் மாதிரி ...
மாதிரினா புரியல டாக்டர் கேட்க்க எல்லாம் மறுபடியும் விளக்கமாக சொன்னேன்
ஓகே பயப்பிடும் படி ஒன்னும் இல்லை இன்ஜக்சன் போட்டுஇருக்கேன் 1 மணி நேரத்தில நார்மலா ஆயிடுவா
அப்புறம் அந்த பொண்ணோட கணவர் எங்க இருக்கார்
நான் குழப்பமுடன் டாக்டர் அந்த பொண்ணுக்கு கல்யாணமே இன்னும் ஆகலை
டாக்டர் என்னை மேலும் கீழும் பார்த்திட்டு வாட் ...அந்த பொண்ணு கன்சிவா இருக்கா....
டா...க்....ட...ர்....அதிர்ச்சியாய்!!!!!!!
என்ன சொல்லறிங்க ...
இந்த பாருங்க மிஸ்டர் நீங்க ஜிரனிசாலும் இல்லனாலும் அது தான் உண்மை ...
உறைந்து போய் வெளி வந்து அமர்ந்தேன் ....
சார் இது பிரிதீ குரல் ...
டாக்டர் என்ன சொன்னார் சார்
எப்படி சொல்வது இவளிடம் இதை அவள் பெற்றவருக்கு தெரிந்தால் உயிரே விட்டு விடுவாரே
என்னுள் புதைத்து கொண்டு மெதுவாய்
நார்மல் தான் 1 மணிநேரத்தில கூட்டிகிட்டு போலம்ம்னு சொல்லிட்டார் (வேற எதுவும் பேசவில்லை )என் மனதில் என்னென்னமோ ஓட்டங்கள் ...விவரிக்க முடியாத வலிகள் ....
ஒருநாள் மாலைபொழுது ....
வளர்மதியை பார்க்குக்கு வரவைத்தேன் ...
வளரு என்கிட்டே நீ ஏன் முன்னமாதிரி சேர் பண்ணிக்க மாட்டேங்கிற ...
.
அண்ணா விஷயம் இருந்தா உங்ககிட்ட சொல்லாமலா ...(பொய்)
வளரு இப்பவாது உண்மைய பேசு ...
எதைபத்தி கேக்குரிங்கனு புரியலையே
நேரடியாவே கேக்குறேன் வைத்தில வளர்ற குழந்தைய பத்தி
அவள் முகம் அதிர்ச்சியில் ...
அ ...ண் .ணா ....
கண்களில் தாரை தாரையாய் நீர் வடிய அவள் சொல்லி முடித்ததும் அதிர்ச்சியில் நான் ...
ஒருநாள் ...
அலுவலகத்தில் ஹாய் பிரெண்ட்ஸ் இன்று நாம சந்தோசத்தில இருக்கவேண்டிய நாள் நம்ம டார்கெட்ட தாண்டி கம்பெனிக்கு லாபம் சம்பாரிச்சு கொடுத்ததுக்காக நம்ம டீமுக்கு அவுட்ரிச் செல்ல கம்பெனி செலவுள்ள ரிசர்ட் எடுத்து தங்கி 3 நாட்கள் எல்லா செலவும் கம்பெனி பாத்துக்கும் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க ...
பஸ் புக் பண்ணி பயணமாக எல்லாரும் கெளம்ப வளர்மதியும் அந்த டீமில்
வழி நெடுக ஆட்டம் பட்டாம் கொண்டாட்டம் பகல் பொழுது சந்தோசமாய் கழிய இருள் சூலும் வேளையில் ஸ்டார் ஓட்டலில் குழுமினர் ஆண்களும் பெண்களும் ...
பிரெண்ட்ஸ் ...யாருக்கு என்ன வேண்டுமோ இஷ்டம் போல ...என்ஜாய் ...
ஸ்டார் ஓட்டல் பார்க்காத வளருக்கு மனதெல்லாம் பட்டாம் பூச்சு சிறகடிக்க ...சில பெண்கள் விஸ்கி ஒயின் கையில் எடுக்க எந்த பழக்கமும் இல்லாத வளர் வாய் பார்த்திருக்க சக தோழிகள் இவளை வம்புக்கு இழுக்க ஒருவழியாய் கூல்டிரிங்க்ஸ் ஒப்புகொள்ள இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சக எதையோ ஒன்றை மிக்ஸ் பண்ணா அறியாமலே குடிக்க மீண்டும் மீண்டும் குடித்து நிதானமில்லாமல் அறையில் கிடக்க இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தது எதுவும் தெரியாது ....எவன் செய்த தவறு என்பது கூட தெரியாது ...மருத்துவர் கூரும் வரை கற்பம் என்பது கூட தெரியாமல் இவள் விதியே என தலையில் அடித்து கொள்ள செய்வது அறியாது நான் தவிக்க ...எங்கே நடத்து தவறு ...தாய் தந்தை அறிந்தால் என்ன ஆகும் எத்தனை கற்பனை கனவுகளுடன் இருந்திருக்கும் இனி ஒவ்வரு நொடியும் நரகம் தானே ....(முற்றும் )