காற்றுக்கு மூச்சு முட்டுதடா
பூமியில் பிறக்க இறைவனின் யாசகம்!
மடியில் தவழ தாயிடம் யாசகம்!!
பாடசாலையில் ஆசானிடம் யாசகம்!
வாழ்வை தொடங்க பெண்ணிடம் யாசகம்!!
அறிவை வளர்க்க நட்பிடம் யாசகம்!
வயிறை வளர்க்க மழையிடம் யாசகம்!!
உடலை வளர்க்க ஒளியிடம் யாசகம்!
அன்பை வளர்க்க அமைதியிடம் யாசகம்!!
வாழ்க்கை முழுதும் யாசகமாய்!
வந்து போகும் சுவாசமே!!
சுவாசம் வாழ்ந்திட உலகத்தாரிடம்
கேட்கும் யாசகமே...!!?
மாசை விராட்டா மானிடா!
இம்மண்ணில் இருப்பதும் முறையா!!?
வாங்கியே பழகிய உனக்கு...
வாய்ப்பாய் வந்தது பாக்கியமே...!
மாசினை விரட்டி இயற்கை அன்னையை காத்திடு!
மனிதா நாம் வாழ சுவாசம் அவசியம் நீ அறிவாயே !!