அதலால் காதல் செய்வீர்

குளிர் காற்று வீசும் தேசம் எங்கே
முழு மதியின் கண்கள் எங்கே
புல் நுனியின் பனித் துளி எங்கே
என் காதல் உலகில் எங்கே
சொல்வாயா அன்பே

உனக்காக காத்திருந்த காலமெல்லாம்
பளிங்கின் சுவடாய் மாறியதே என் அன்பே

கடலின் உள்ள ஆலமெல்லாம்
மனிதன் ஒரு நாள் கண்டானடி

செல்வமே நீ கவிஞனக்கும்
புலபடாத வரிகளா

உன் எண்ணம் ஏன் ? யாரும்
கண்டிடாத புதையலாய் மறைக்கிறாய்

இதயச் சிறகுகளை திறக்காமல்
என் திரையில் தோன்றி மறைபவளே
இமைகளில் விழும் நீரால்
என் மனதினை மூழ்கடித்தவளே

அன்பே அன்பென்னும் கனவில் கலந்தவளே

காதல் என்றால்
உலகின் உறவுகளின் ஜீவாம்சம்மே

காதல் என்றால்
உயரும் உள்ளத்தின் மந்திரப் பொருளே

காதல் தான்
மொழிகள் இல்லா மொழியை கொண்டு
உலகில் வாழ்கின்றதே

காதலால் காவியம்
படைத்திடும் மாணவனே
காதலால் காதல் செய்து
உயிரின் உறவை வளர்பவனே .....

எழுதியவர் : கண்மணி (3-Mar-14, 11:48 am)
பார்வை : 153

மேலே