வாழ்க்கை பயணத்தில் பெண்மை
நீ வருவாய் வருவாய் என்றே
எதிர்நோக்கி காத்திருந்தேன்!
வந்தாய் ஒருவழியாய்
மனம் மகிழ்ந்தேன் !!
பார்த்தும் பாராதது போல்
தொலைவில் தள்ளி நின்றாய்!!
துரத்தி உன்கரம் பிடித்தேன்
காலால் பாதம் மிதித்தேன்...!
உன்கரம் பிடித்து
என்னுடல் நுழைத்தேன்...!
பெருமூச்சி இரைத்தேன்
உடலில் வியர்வை துளிகள்...!!
நெஞ்சுடன் நெஞ்சு இணைத்து
நெருசலில் நான் தவித்தேன்!
பிஞ்சுடன் தாய் கண்டு
மனம் குமுறிட குமுறிட....!
பெண்கள் அனைவரும் இருக்கையில்
ஆடவர் இருக்கையிலும் பெண்டீர்
பிஞ்சின் அழுகுரல் நெஞ்சை கசக்க
பெண்கள் முகத்தை திருப்ப...!
முதியர் இருக்கையை கொடுத்துதவ
உன்முகம் இருக்கமாய்....!
பெண்மை தாய்மை என
எண்ணிய எண்ணம் தொலைந்தது!!
ஆடவர் தாய் மனமாய்...!
பெண்டிர் ஆளும் ஆடவராய்!!
தள்ளாத வயதிலும் தளராத மனது
பெண்ணுக்கு பெண் இடம் தர மறுத்தார்!
பெண்ணே நாளைய தாயே!!
நெரிசலில் நீ சிக்குண்டு
தவிக்கையில் உணர்வாயோ!!
சம உரிமை கோரி குரல் கொடுத்தாய்!!
பாதி தந்ததற்கே முழுதாய் ஆள்கின்றாய்!
பெண்ணுக்கு பெண்ணே உதவியின்றி
சொகுசாய் நீ மட்டும் அனுபவித்தாய்...!
அரைமணி பயணத்துக்கு இத்தனை ஆர்பரிப்பா !
தெருவில் இறங்கி போராடி...!
வாங்கிய சலுகையெல்லாம்
ஒருத்தியே அனுபவித்தால்
பெண்மையை யார் காப்பார்...!!
ஆடவர் தாய்மையை மதிக்கின்றார்
பெண்மை பெண்மையை எதிர்கின்றார்
பெண்ணுக்கு பெண் உதவியாய்இருந்திடும்போது
தானே கிடைக்கும் இடவசதி !!