சலனத்தைக் கொடுக்காத பரிசு

மரண வீடுகளில்
ஆறுதல் சொல்லவே
எப்போதும்
ஒரு பட்டாளம்
தேவைப்படுகின்றது...
ஆறுதல் வார்த்தைகள்
துயரத்தைத் தணித்து
விரக்தியை விலக்கி
மேலும் இழப்புக்களை
தவிர்க்க வைக்கிறது...
உழைத்து உழைத்து
ஓடான உடல்
நிரந்தர ஓய்வில்
நிம்மதியாய் பள்ளிகொள்ள
எங்கும் சோகமயமே....
உயில்குறித்த ஆதங்கம்
உறவுகளை ஊடுருவி
உள்ளே
உருக்குலைய வைத்தாலும்
சோகபிம்பங்களே வெளியே..
மரணம்
இறைவனின் கணக்கில்
எப்போதோ
எழுதப்பட்ட தீர்ப்பு..........
மரண பூமியில் வாழ்ந்தவனுக்கு
அது என்றைக்குமே
சலனத்தைக் கொடுக்காத `பரிசு`.!!
=================================
தோழி துர்க்கா