மனித பிறவி

பூமி தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை மனிதனின் தேடல் மட்டும் குறையவே இல்லை.
மனிதனின் புதிய முயற்சியால் தான் பல வளர்ச்சி தோன்றி உள்ளது.
இத்தனை இருந்தும் கடவுள் என்ற ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை நாம் அவர் அவர் நம்பிக்கையின் பேரில் நம்பி கொண்டு இருக்கிறோம்.கடவுள் இல்லை என்று சொல்பவன் அவன் கருத்தில் இருந்து மாறுவது இல்லை.ஆனால் கடவுளை நம்புவோர்
தன் வாழ் நாளில் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் கொள்கின்றனர்.
விபத்தில் திருமணம் ஆகாத சிறு வயது மகன் இறக்கும் போது கடவுளே நீ இருக்கிறாயா என்று அழும் தாயின் கண்ணீரில் அந்த சந்தேகத்தை நாம் காண கூடும்.
இந்த கதை ஒரு கற்பனை மட்டுமே.
கடவுளே கடவுளே என்று தன்னை வணங்கும் மக்களை காண இறைவன் பூமிக்கு வர எண்ணுகிறான்.ஆனால் மக்களை காணும் போது தானும் ஒரு மானுட பிறவியாய் போக வேண்டும் என தீர்மானித்து பூமிக்கு வருகிறார்.ஆனால் மனிதனாய் மாறிய பின்பு இறைவன் என்ற எந்த சக்தியும் அவருக்கு வராது.(ஒரு படத்தில் சொன்னது போல)
அது இரவு நேரம்.நரிகளும் நாய்களும் மட்டும் உலாவும் தருணம்.இறைவன் அப்படியே தான் படைத்த அழகை எல்லாம் ரசித்து கொண்டு நடந்து வந்தார்.அருகாமையில் ஏதோ சத்தம் கேட்க,
சத்தம் வரும் திசையை நோக்கி நடந்தார்.அங்கே ஒரு பெண்ணை நான்கு பேர்கள் சேர்ந்து அந்த பெண்ணின் கற்பை சூறையாடி கொண்டு இருந்தனர்.கடவுளுக்கு கோபம் உச்சம் அடைந்து அவர்களை கொல்ல முற்பட்டார்.ஆனால் அவர் மனித பிறவியாய் இருந்ததால் ஒருவராய் சமாளிக்க முடியாது என சொல்லி உதவிக்கு ஆட்களை தேடினார்.அந்த வழியே வந்த இருவரை நோக்கி இறைவன் சென்று நடந்ததை கூறி உதவிக்கு அழைத்தார்.அவர்கள் உடனே நீ சொல்வதை பார்த்தால் அவர்கள் பெரிய கொலைகாரர்கள் போல தோன்றுகிறது அதுவும் இல்லாமல் ஏன் அந்த பெண் தனியாக வந்தாள் எனவே எங்களை விடு என சொல்லி அந்த இடத்தை விட்டு போனார்கள்.
அதற்குள் அந்த பெண் உயிரே பிரிந்து விட்டது.கடவுளுக்கு தன் மீதும் கோபம் மக்கள் மீதும் கோபம்.
மக்களை படைத்த போதே பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தையாய் ஆணை பிறக்க செய்து அவளின் தாய்மை உணர்வை சொன்னோமே அதை நாம் படைத்த மக்கள் மறந்து விட்டனரே என்று மக்கள் மீதும்,
இந்த கொடுரம் காணாத தொலைவில் நாம் இருப்பதை நினைத்து கடவுள் மீதும் கோபம் கொண்டார்.
அதிகாலை விடிந்தது.கடவுள் அதே இடத்தில் கல் போல நின்று கொண்டு இருந்தார்.இரவு அவரை கடந்து சென்ற இருவர் குழப்பமாய் நடந்து வந்தனர்.இறைவன் என்னவென்று கேட்டார்.அவரின் மகளை காணவில்லை என்றும் இரவு ரூமில் உறங்குகிறாள் என்று நினைத்தோம் காலை எழுந்து பார்க்கும் போது காணவில்லை என்றார். இறைவன் அவர்களை இரவு கொடுமை நடந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.அங்கே முற்புதரில் அவருடைய பெண் பிணமாய் கிடந்தாள்.
கடவுளுக்கு அவர்களிடம் சொல்ல ஒன்றும் இல்லை.ஏன் என்றால் இது ஒரு மனிதன் செய்யும் தவறு இல்லை உலகில் பாதிக்கு மேல் இருப்போர் என் வீடு எரியாத வரை எனக்கு சந்தோசம் என்று தான் வாழுகின்றனர் என்பதை தற்போது உணர்ந்த வராய் நடக்க தொடங்கினார்.
நர மாமிச பதர்களை கண்டு கொள்ளாமல் அரசாங்கம் மட்டும் இல்லை நம்மை படைத்தவனும் இருக்கிறான் என்ற ஆதங்கம்.
ஆனால் இதை கண்டு ஒன்றும் செய்ய முடியாத நானும் ஒரு மனிதன் என்ற அவமானம்.

எழுதியவர் : கார்த்திக். (4-Mar-14, 5:05 pm)
Tanglish : manitha piravi
பார்வை : 291

மேலே