♥உன் நினைவின் வலிகள்♥

* கண்ணில் தூசி
விழுந்தது போல்
உன் நினைவுகள்!!!

* நெஞ்சில் பாசி
படர்ந்தது போல்
உன் நினைவுகள்!!!

* உயிரில் ஊசி
நுழைந்தது போல்
உன் நினைவுகள்!!!

* உடலில் கொட்டும்
தேள் போல்
உன் நினைவுகள்!!!

* உணர்வில் வெட்டும்
கத்தி போல்
உன் நினைவுகள்!!!

* இதயத்தில் கத்தும்
குழந்தை போல்
உன் நினைவுகள்!!!

எழுதியவர் : இதயவன் (4-Mar-14, 10:24 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : un ninaivin valikal
பார்வை : 101

மேலே