நிறைவு என்பது என்ன
நீண்ட வானத்தில்
நிறைவு உண்டா ?
காணும் காட்சியில்
முழுமை உண்டா ?
காசின் மகிழ்வில்
நிறைவு உண்டா ?
காதல் இன்பத்தில்
முழுமை உண்டா ?
நினைவுக்குள்ளே
நிறைவு உண்டு......
முயற்சித்துப் பாரு
முழுமை உண்டு.....
கைக்குக் கிடைப்பது
நிறைவு இல்லை
கருத்தால் உணர்வதே
நிறைவடா தம்பி........