உன் கண்களில்...!!

உன் கண்களில் வழிந்தோடும்
கண்ணீரில் கரைந்து செல்கின்றது
என் உயிர்...
உன் புன்னகையை தரிசித்திடும்
என்னுயிருக்கு உன் கண்ணீரை
கண் கொண்டு பார்த்திடும்
போது தனிமையில்
கதறியழுகின்றதே கண்ணே..!
உன் கண்ணீர் துடைத்திட
என் கைகள் இல்லை உன்னருகிலே
மனம் இறக்கை கட்டிப் பறக்கின்றது
உன் அருகில் வருவதற்காக.......!!!