தமிழ்ப்படைப்புகள் வளர்ச்சியில் எழுத்துகாம்-கட்டுரை

தமிழ்ப்படைப்புகள் வளர்ச்சியில் எழுத்து.காம்
முனைவர் மா.தாமோதரகண்ணன்
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி அரசங்குடி-620013
திருவெறும்பூர் வட்டம் திருச்சிமாவட்டம்
அலைபேசி-9442663637
முன்னுரை
‘‘ சென்றீடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ” மேலும், ‘‘ தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல்வேண்டும் ” என்றெல்லாம் மகாகவி பாரதியார் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டுவனவற்றை அறிவுறுத்தியுள்ளார். எட்டுத்திக்கும் உள்ள கலைச்செல்வங்களை உட்கார்ந்த இடத்திலிருந்து இணையம் வழியே காணலாம். இயல்தமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் அறிவியல்தமிழ் இணையத்தமிழ் என்றும் கூறலாம். தமிழ் மொழியைக் காலத்திற்கேற்றவாறு புகழில் ஏற்றும் பணியை எழுத்து.காம் இணைதளம் செய்து வருகிறது.
இணையதளம்
ஒரு செய்தி குறித்து புத்தகத்தில் தேடியது ஒரு காலம். இன்று இணையதளத்தில் தேடிவிட்டுப் பிறகுதான் புத்தகத்தில் தேடுவது நவீன காலம். தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் நுலில் துரை.மணிகண்டன்-த.வானதி அவர்கள், ‘‘கணினியை ஒரு புதிய உத்தி முறையில் பயன்படுத்திக்கொள்வதே இணையம் எனலாம். அறிவுதாகம் கொண்ட ஒரு சிலர் தங்களுடைய சொந்த அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் புதிய அறிவைத்தேடிப் பெறவும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர் ” என்பார்.இன்றையத் தமிழ் மொழியை இணையதளத்தில் கொண்டு சென்று வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.அதற்குப் பேருதவியாக எழுத்து.காம் உள்ளது.

எழுத்து.காம் வடிவமைப்பு
Hiox என்ற நிறுவனம் நடத்துகிறது. முன்பக்கத்தில் இருவரிப்பட்டை உள்ளது. அதில்,
முன்பக்கம் - கவிதை - கதை - நகைச்சுவை – எழுது- உறுப்பினர்கள் -
அகராதி - திருக்குறள்- தமிழ்படி-எண்ணம்-கருத்துகணிப்பு-கேள்விபதில்-வாழ்த்துஅட்டைகள் முன்பக்கத்தில் புத்தகவடிவத்தில் பல்வேறு கூறுகள் இடம் பெற்றுள்ளன.தமிழ்க்கவிதைகள் என்னும் தலைப்பு.அதில், ‘‘ தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம் ”. என்ற அறிவிப்பு உள்ளது.இதன் கீழே சிறந்த கவிதைகள் இடம் பெறகிறது.சிறந்த படைப்புகள் வரிசையில் கவிதைகள் ,சிறுகதைகள், நகைச்சுவைத்துணுக்குகள் சில இடம் பெறகிறன்றன. கட்டுரைகள் தலைப்பில் கட்டுரையின் தொடக்கம் மட்டும் வெளியிடப்படுகின்றது.நகைச்சுவையின் தலைப்பில் நகைச்சுவைத்துணுக்குகள் சில இடம் பெறுகின்றன.பிரபலக் கவிஞர்களின் கவிதைகள் சில இடம் பெறுகின்றன.
ஓரத்தில்,
எழுத்து.காம் - அழகிய தமிழ் சொர்க்கம்
தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems
மொத்த உறுப்பினர்கள் : 17954
நீங்களும் உறுப்பினராக (Register) என்று காணப்படுகின்றன.
இதன் கீழே பிரபலக் கவிஞர்களின் பெயர்கள் வரிசையாக இடம் பெறுகின்றன. வகைகள் என்னும் தலைப்பில் others வகைகள் : தமிழ் / Tamil கவிதை Others (53238) காதல் கவிதை (52932) வாழ்க்கை கவிதை (27368) ஹைக்கூ கவிதை (13946) காதல் தோல்வி கவிதைகள் (8751) நண்பர்கள் கவிதை (6202) தமிழ் மொழி கவிதை (3722) எழுத்து (1614) கைபேசி கவிதைகள் (937) படித்ததில் பிடித்தது என்னும் தலைப்பில் பிறாின் படைப்புகள் இடம் பெறுகின்றன. இதன் கீழே திருக்குறள் இடம் பெறுகின்றது.
உட்பிரிவுகள்-

கவிதை

1.தோழர் கவிதை

2.புது கவிதை

3.சஞ்சுவின் கவிதைகள்

4.தமிழ் கவிஞர்கள்

5.கவிதை பிரிவுகள்

6.நிரல் பலகை

7.பரிசு பெற்றவை

கதை

1.கட்டுரை .

2.சிறுகதை

3.பாட்டி சொன்ன கதைகள்

4.சிறுகதை பிரிவுகள்

5.கட்டுரை பிரிவுகள்

6.பரிசு பெற்றவை

7.படித்ததில் பிடித்தது

நகைச்சுவை

1.நகைச்சுவை பிரிவுகள்

2.பரிசு பெற்றவை


எழுது

1.கவிதை

2.கதை

3.கட்டுரை

4.நகைச்சுவை

உறுப்பினர்கள்

1.புதியவர்

2.கவிதை

3.தேர்வு

4.பார்வை

5.கருத்து

6.பரிசு பெற்றவர்கள்

அகராதி

1.பொருள் சேர்

திருக்குறள்
இங்கு 1330 திருக்குறளையும் படிக்கலாம்.ஆங்கிலத்திலும் உள்ளது.மு.வரதராசனார் உரையும் சாலமன்பாப்யைா உரையும் இடம் பெறுகின்றன.
எழுத்து.காம் இல் எழுதும் முறை
எழுத்து.காம் இல் சாதாரணமாக எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் தங்களின் படைப்புகளை மிக எளிதாக வெளியிடலாம். முதலில் பயன்படுத்துபவரின் பெயரில் ஒரு மின்னஞ்சல் முகவரியைத் தொடங்க வேண்டும். பதிவு (Register) என்ற இடத்தில் சொடுக்க வேண்டும். கேட்கும் விவரங்களைத் தரவும். விரும்பினால் நம் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யலாம். பின்னர் நாம் அனுப்பியுள்ள விவரங்களைச் சரிபார்த்து நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதி அளிப்புச் செய்தியைத் தருவார்கள். அந்த அனுமதி அளிப்புச் செய்தியைச் சொடுக்கினால் போதும் நமக்கான பக்கம் ஒதுக்கப்பட்டுவிடும். எழுத்து.காம் இல் படைப்புகளை வாசிப்பதற்குப் பயனர் பெயர் கடவுச்சொல் தேவையில்லை. எழுத்து.காம் இல் படைப்புகளை வெளியிடுவதற்குப் பயனர் பெயர் கடவுச்சொல் தேவை. மின்னஞ்சல் முகவரிக்குப் பயன்படுத்திய பயனர் பெயர் கடவுச்சொல்லைக் கூட நாம் அப்படியே பயன்படுத்தலாம்.அவ்வாறு பயனர் பெயர் கடவுச்சொல்லைச் சரியாகத் தந்து தளத்தின் உள்ளே சென்று ‘‘ எழுது ” என்னும் பகுதியைச் சொடுக்கினால்
1.கவிதை
2.கதை
3.கட்டுரை
4.நகைச்சுவை
என்று வரும். மேற்சொன்னவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். படைப்புக்கானத் தலைப்பினை இடவேண்டும். படைப்புத் தொடர்பான படங்கள் இருந்தால் பதிவேற்றம் செய்யலாம்.அதன் கீழே நம்முடைய படைப்பினை எழுதிடும் வெள்ளைத் தாள் பகுதி உள்ளது. சாதாரணமாக சுட்டியை வைத்து சொடுக்கிவிட்டு வெள்ளைத் தாள் பகுதியில் எழுதமுயற்சி செய்யலாம்.அதாவது விசைப் பலகையில் AMMA என்று அல்லது amma என்று தட்டச்சு செய்து விசைப் பலகையில் உள்ள இடைவெளி(space) பொத்தானை அமுக்கினால் போதும் தமிழ்மொழியில் ‘‘ அம்மா ” என்று உடனே ஒருங்கு குறியில் (Unicode)மாறுவதைக் காணலாம். இம்முறைக்குப் பெயர் ஒலிபெயர்ப்புத் தட்டச்சு முறை(phonetic type method) என்று பெயர். சாதாரணமாகத் தமிழ் எழுத்துருக்களை(tamilfonts)வைத்துக்கொண்டு தட்டச்சு செய்து தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாது. ஒருங்கு குறி(Unicode) முறையில் தமிழ் எழுத்துருக்களை(tamilfonts) வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யவேண்டும். அதற்கு ஒர் எளிய வழி உண்டு. இணையதளத்தில் சென்று nhmwriter 2.0 என்று தட்டச்சு செய்யவேண்டும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். சிறிய மணி போன்ற வடிவம் தோன்றும். அதன் உள்ளே சென்றால் tamilbaminiunicode அல்லது ALT+4 தேர்ந்தெடுக்கவும்.இப்பொழுது நீங்கள் ஏற்கனவே கற்றுக் கொணட பாமினியில் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்யலாம். சில எழுத்துருக்கள் தெளிவாக வராத போது ALT+2 பொத்தானை அமுக்கினால் போதும் ஒலிபெயர்ப்புத் தட்டச்சு முறை(phonetic type method) அதிலேயே தோன்றும். அதாவது விசைப் பலகையில் AADU என்று அல்லது aadu என்று தட்டச்சு செய்து விசைப் பலகையில் உள்ள இடைவெளி(space) பொத்தானை அமுக்கினால் போதும் தமிழ்மொழியில் ‘‘ ஆடு ” என்று உடனே ஒருங்கு குறியில் (Unicode)மாறுவதைக் காணலாம். இம்முறையில் தெளிவில்லாத சில எழுத்துருக்களை மேற் சொன்ன முறையில் தட்டச்சு செய்து நகல் எடுத்து ஒட்ட (copy and paste) வைக்கலாம்.பிறகு வெள்ளைத் தாள் பகுதி யின் கீழே காதல் ,நட்பு ,இயற்கை ,வாழ்க்கை ஆகிய தலைப்பின் கீழே நம்முடைய படைப்பினை வகைப்படுத்தி எழுத வேண்டும். அடுத்து படைத்தவர் பெயர் இடவேண்டும். பிறகு பிறர் கருத்துரை அனுமதி உண்டா இல்லையா என்பதை தெரிவு செய்ய வேண்டும். அடுத்து
‘‘ நிபந்தனைகள்: இந்த படைப்பு தனிப்பட்ட நபரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.இந்த படைப்பில் எந்த காப்புரிமை மீறல்களும் இல்லை.”
என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
நிறைவாக,
[குறிப்பு:உங்களின் படைப்பு அல்லது கருத்துக்கள் ஒருவரை தாக்கிப்பேசுவதாகவோ, கொச்சைப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ, அபாயகரமானதாகவோ,பயமுறுத்துவதாகவோ, சட்டத்திற்கு புறம்பானதாகவோ, தரம்குறைவானதாகவோ மற்றும் பெருமை குலைப்பதாகவோ இருந்தால் அது சட்டப்படியான (Section 66A of IT ACT) நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .]
முடிவில்,

‘‘ கவிதை சிறிது நேரத்தில் தளத்தில் சேர்க்கப்படும்’’. என்ற அறிவிப்பு வரும். முன் பக்கம் சென்று என் படைப்பு என்னும் பகுதிக்குச் சென்று நம்முடைய படைப்பினைக் காணலாம். உலகம் முழுவதும் நம் படைப்புகளைப் படித்தறியலாம். படைப்பினைக்குறித்த விமர்சனங்கள் நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.

எழுத்து.காம் சிறப்புக்கூறுகள்

1. எவ்விதக் கட்டணமும் இல்லை
2. வெகுஜன இதழ்களை விட தரமான படைப்புகள் இடம் பெறுகின்றன
3. உலகளாவிய வாசகர் வட்டம் கிடைக்கப்பெறுகின்றன
4. படைப்புகள் அழிவதில்லை
5. சாதாரணமாக எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் தங்களின் படைப்புகளை மிக எளிதாகத் தட்டச்சு செய்து வெளியிடலாம்
6. உலகளாவிய இலக்கிய நண்பர்கள் வட்டம் கிடைக்கப்பெறுகின்றன
7. உலகம் முழுவதும் நம் படைப்புகளை இணையதளத்தில் சென்று படித்தறியலாம்
8. படைப்பினைக்குறித்த விமர்சனங்கள் நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்
9. வளரும் இளம் படைப்பாளிகளுக்கு உகந்த இணையதளம்
10. இணையதளம் வழியே மனிதநேயம் வளா்க்கிறது
11. படைப்பாளிகளுக்கும்-படிப்பாளிகளுக்கும் பாதுகாப்பு உள்ளது
12. இங்கு 1330 திருக்குறளையும் படிக்கலாம்.ஆங்கிலத்திலும் உள்ளது.மு.வரதராசனார் உரையும் சாலமன்பாப்யைா உரையும் இடம் பெறுகின்றன.
13. தமிழ் மொழியால் உலகத்தமிழர்களை ஒருங்கினைக்கிறது
14. எண்ணம்- கேள்வி-பதில் பகுதியானது நாட்டுநிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன

மேலும் ‘‘ இணையம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பொதுவான கணினிகளால் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல், படங்கள் ஆகியவற்றைப் பொதுவான கணினிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய அங்கீகாரம் பெற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதே வலைப்பின்னல் எனப்படுகிறது.”என்னும் சிவாஸ் அவர்களின் வலைப்பின்னல் விளக்கத்துடன் எழுத்து.காம் இணையதளம் ஒத்துப் போவதைக் காணலாம்.

முடிவுரை
எழுத்து.காம் இணையதளம் உலகளாவிய தமிழ்இலக்கிய வரலாற்றில்
உலகளாவிய தமிழ்மொழி வரலாற்றில் குறிப்பிடும் படியான நிலைப்பேற்றினைப் பெற்றுவருகிறது.காலமறிந்து தேவையறிந்து உலகத் தமிழ்மொழிக்குச் சேவை செய்கிறது எனலாம்.

ஆய்வுக்குத்துணை நின்றவை
1. எழுத்து.காம் இணையதளம்
2. தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் - துரை.மணிகண்டன்-த.வானதி . கமலினி பதிப்பகம் –தஞ்சாவூர்-2 டிசம்பர்12
3. இண்டர்நெட் புதையல்-சிவாஸ்-P.T.BELL வெளியீடு-சென்னை-24 ஆண்டு-2001

எழுதியவர் : damodarakannan (6-Mar-14, 6:44 pm)
பார்வை : 498

மேலே