+நல்லகாலம் பிறக்கட்டும் எல்லோருக்கும்+
நல்லகாலம் பிறப்பதை
சொல்லவந்தது கூண்டுக்கிளி
அதற்கெப்போ விடுதலையென
சொல்லப்போவது யாரிங்கே?
நல்ல நேரம் குறித்துக்கொடுத்த
சோசியக்காரருக்கு
நல்ல நேரத்தை கொடுக்கப்போவது யார்?
வீட்டில் குழந்தைகள் பசியால் தவிக்குதே...