சிதறு தேங்காய்
சிதறு தேங்காய்
*
செய்த தவறுக்கோ
செய்யாத தவறுக்கோ
தலையில் குட்டிக்
கொண்டுத் தோப்புக்
கரணம் போடுகிறார்கள்
வினாயகர் எதிரில்,
அப் பக்தர்களை
வேடிக்கைப் பார்க்கின்றன
சிதறு தேங்காய்ப்
பொறுக்க வந்தக்
காக்கைகள்.
சிதறு தேங்காய்
*
செய்த தவறுக்கோ
செய்யாத தவறுக்கோ
தலையில் குட்டிக்
கொண்டுத் தோப்புக்
கரணம் போடுகிறார்கள்
வினாயகர் எதிரில்,
அப் பக்தர்களை
வேடிக்கைப் பார்க்கின்றன
சிதறு தேங்காய்ப்
பொறுக்க வந்தக்
காக்கைகள்.