உண்மையும் உயிர்பெறும்

பச்சை பசேலென
பசுமையாய்....
கான குயில்களின்
இசை தேனருவியாய்
செவியில் பாய்வது எங்கே!
மற்றவர்களை பார்த்து
சிரிக்கும் இதழ் விரிந்த
மலர்கள் எங்கே!
உண்மைகள் பொய்த்து போவதில்லை ...
விடை தேடுகின்றன
விழித்தெழும் நாளை நோக்கி ......