பெண்ணே உன்னால் பிரபஞ்சம் - 9

துளைத்து விடு பெண்ணே நீ
துவம்சமாகட்டும் தீமைகள்....

துணிந்து நீ இறங்கி விட்டால்
தூங்காது பூமியில் உண்மைகள்...

பூங்கொடி என்று வர்ணித்து
பூரிக்க வைத்து வளைத்திடுவார்

புரிந்து கொண்டு நீ நிமிர்ந்து நில் - அவர்
புதுமைப் பெண்ணை உணர்ந்திடுவார்...

விரல் நுனியில் நக ஆயுதம் - நீ
விரைந்து படிக்க எழில் ரவுத்திரம்...

விபரம் சொல்லத் தேவையில்லை - நீ
விளங்கிக் கொண்டால் தீமை இல்லை....!!

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
( 8.3.14 )

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Mar-14, 11:39 am)
பார்வை : 52

மேலே