நெகிழிகள்

கலி காலத்தில் பூமிக்கு காலன் அனுப்பிய
தூதுவன்
விண்வெளியை காண தடையாய்
உள்ளது ஓஸோன் என அழிக்க
வந்ததா என ஐயம்
மண் வளம் கெடுத்து மழைநீர்
சேமிப்பை தடுக்கும் பிளாஸ்டிக் வேண்டாம்
நமக்கு
இது இல்லாமல் வாழ்ந்த காலங்களும்
இருந்ததாயின், இலகுவாக கருவறுக்க
வகை செய்திட வேண்டும்
மஞ்சப்பை பிடிக்க கேவலமாய்
நினைத்த கைக்குத் தெரியாது
இந்த நெகிழியால்
நம் வாழ்கையே அஸ்தமிக்கும் என்று
வளமான வாழ்வுடன் வருங்காலம்
வாழ்வதற்கு வாழ்விழக்கச்செய்வோம்
நெகிழியை ,
“நெகிழியைக் களைந்து நெகிழ்ச்சியாய் வாழ்வோம்