புவியின் உயிரே மரந்தானே
புவியின் உயிரே காற்றாகும் !
பூமியில் வாழும் உயிர்கெல் லாம்
புத்துயி தருவது காற்றா கும்!
காற்றின் தூய்மை காப்பது வோ
காட்டில் நிறைந்த மரந்தா னே?
காட்டில் வளர்ந்து ஓய்வின் றி
காற்றில் கலக்கும் தூசுக ளை
போற்றும் உணவாய் மாற்றுவதா ல்
புவியின் உயிரே மரந்தா னே!
-------சித்திரைச் சந்திரன்