ஆசை
கடற்கரையோரம் சென்றேன்!
கடல்மண்ணில் மிதந்தேன்-
அலையோடு கலந்தேன்-
அவளை கடலோடு ஒப்பிட்டு பார்த்தேன்!
திடீரென்று என்முன்னே
கடவுள் தோன்றினான்!!!
தங்கத்தை அளித்தான்
மறுத்தேன்!
மாளிகை அளித்தான்
மறுத்தேன்!
சொர்க்கத்தை அளித்தான்
மறுத்தேன்!
கடவுள் கோபமாகி
என் ஆசையை கேட்டான்!
நான்,
பூவாக வேண்டும்
அவள் கூந்தலில் குடியேற!
கண்மையாக வேண்டும்
அவள் கண்ணை உரச!
கனியாக வேண்டு
அவள் இதழை பருக!
மழையாக வேண்டும்
அவள் மேனியை நனைக்க!
சொல்லி முடித்தேன்!
இறைவனை காணவில்லை???
அவனுக்கும் ஆசையயாம்
என்
காதலியை காண !!!!!