ரங்கநாதன் Kavithaikal
கிளி இருந்தது ; சோடி கிளி இருந்தது,
கனி நிறைந்த சோலையிலே குடியிருந்தது
இணைந்திருந்தது; ஈருயிரும் ஓர் உயிராய் பிணைந்திருந்தது
கொஞ்சுமொழி காற்றினிலே தவழ்ந்திருந்தது,
காலதேவன் விட்டிருந்த தூது வந்தது ;
காத்திருந்தது; காலநேரம் பார்த்திருந்தது;
பறந்து சிறகடிச்சா பருந்து அடிக்குது,
துரத்தி உயிர் குடிக்குது.
பதுங்கி உயிர் பிழைக்க பாம்பிருக்குது ;
அது படமெடுக்குது.
மெல்ல நட நடந்தா வேடன் வில்லிருக்குது ;
வந்து வழி மறிக்குது;
பயமறியா பைங்கிளிகள் பதை பதைத்தது ;
உடல் துடி துடித்தது.
விதி முடிந்தது, கிளியின் கதை முடிந்தது ;
கிளியிருந்த சோலையிலே இறகிருந்தது ;
வெருஞ்சிறகிருந்தது
நகம் கிடந்தது ; சோடி முகம் கிடந்தது ,
கொஞ்சுமொழி காற்றினிலே கரைந்திருந்தது
கவிஞர் நரியனுர் ரங்கு
செல்: 9442090468
ஈமெயில் : நரியனுர்ரங்கு@ஜிமெயில்.காம்