வரமாய் நீ வருவாயா

எனக்கு நீர் என்றால் பயம் என்றேன்..
என்னை கண்டால் பயமா என்றாய் ..
உடனே மறுத்தேன் ..- உன்
உள்ளம் புரிந்தது என்றாய் ..

கேள்விகளால் என்னை பேசவைத்தாய்..
நான் பேசியதையே கேள்வியாக்கினாய்..
என்னை பேசவைத்தவனும் நீ ..
பேச்சிழக்க வைத்தவனும் நீ..

உனக்கு என்ன வேண்டும் என்றாய் ..
நீங்கள் தான் வேண்டும் என்றேன் ...
வேற என்ன வேண்டும் என்றாய் ..
உங்கள் அன்பு வேண்டும் என்றேன் ...

அடியே! நான் கேட்டதென்ன? என்றாய்
நான் சொல்வது உங்கள் அன்பின்
மிகுதியால் தரும் எதுவும்
எனக்கு சிறப்பானது என்றேன்..

என் வாழ்கை முடியும் தருணம்
என நினைத்த எனக்குள் - என்
வாழ்வின் முடிவிலியாய் நீ என்றாய் - உன்
வரவிற்காய் காத்திருக்கிறேன் என்காதலனே...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (12-Mar-14, 10:51 am)
பார்வை : 959

மேலே