அவள் ஒரு கவிஞை
கவிஞை அவள்
கற்பனைத் தோகையவள்
சொற்களின் சிற்பியவள்
அற்புதக் கவிஞையவள்
ஆனந்தத் தென்றலவள்
அந்தியின் கவிதையவள்
அன்புக் கவிஞையவள்
அழகிய தமிழ் மகள்
எந்தன் நெஞ்சில்
விரியும் எழுத்து அவள்
----கவின் சாரலன்