கூடல்
முத்தங்கள் தின்றோம்,
சத்தங்கள் செய்தோம்,
கட்டிப்புரண்டோடி கட்டில்கள் உடைத்தோம்.
உனக்காக நானும்,
எனக்காக நீயும்,
உன்னதங்கள் செய்தோம்.
இந்த யுத்தத்தில்,
உன் வெற்றி என் வெற்றி,
என் வெற்றி உன் வெற்றி.
உச்சங்கள் அடைந்தோம்,
ஈருடல் ஓர் உயிராய் நின்றோம்.
ஹார்மோன்கள் வற்றிப்போக,
ஆசைகள் அழிந்துபோக அமைதியானோம்.
இதுவும் ஒருவகை தியானம்தான்.