அந்தப்பேச்சு
திடுப்பென்று
அவள் கணவன்
வந்திருக்கலாம் .......
அவள் குழந்தை
அழத் தொடங்கியிருக்கலாம்.......
அலைபேசியின்
பேட்டரி
தீர்ந்திருக்கலாம் ........
யாராவது
விருந்தினர்கள்
கதவு தட்டியிருக்கலாம் ..........
அடுப்பில்
பால் பொங்கியிருக்கலாம் ....
உடம்புக்கு
முடியாமல்
போயிருக்கலாம்..........
இப்படியாக
அவன் தனக்குள்
சமாதானங்கள்
சொல்லிக்கொண்டான்,
வெறும்
நல விசாரிப்புகளோடு
அவசரமாய்
முடிந்து போன
அவளுடனான
அந்தப் பேச்சிற்கு !
அவள்,
அவன்
கல்லூரித்தோழி,
அல்லது
பழைய காதலி !