துளித்துளியாய் -02
சொந்த நாட்டிலே
வெந்து ஓடுவோர்
எந்த நாட்டிலும்
சந்தில் வாழவோ?
***
வெடிகள் வெடித்து
விளையாடும் சிறுவர்!
வெடிகுண் டெடுத்து
வினையாடும் பெரியோர்!
என்ன செய்யவோ?
எங்கு போகவோ?
எதனில் முடிக்கவோ?
***
மூன்று கிடைக்கினும்
முக்தி! ஏற்கிறோம்!
இராமர் மடியில் அணில்!
***
காசு கரியாகத்
தீபாவளி வேண்டுமா?
மாசு உருவாக்கத்
தீபாவளி வேண்டுமா?
***
குளத்தில் கல்போட்டு
விளையாடினான்!
இன்று
ஆற்றில் மண்ணெடுத்து
மகிழ்கிறான்!
***
கொலை தண்டனையை
ரத்து செய்வோம்!
குடித் தண்டனை
கொண்டு வருவோம்!
***
தள்ளாடும் குடும்பம்
தாங்கிப் பிடிக்கத்
தமிழ்பாடும் குடும்பம்
வெள்ளாட்டுப் பலிகேட்டு
வீதிவழி வருகிறது!
தேர்தலோ! தேர்தல்!
***
நேரம் பார்ப்பது மூடத்தனம்!
சோரம் போவதும் சாணக்கியம்!
ஆரம் போடுதல் தொண்டரினம்!
***